அன்பு மாணவச் செல்வங்களே!
சரித்திர வியாழநில் பானிப்பட்டுப்
போரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம்
நடுவுநிலைமை குறள் எண் 4
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
விளக்கம்: நடுவுநிலைமை
உடையவர், நடுவுநிலைமை அற்றவர் என்பது, அவருக்குப்பின் அவர் பெற்ற புகழ்
பழியைக்கொண்டு விளங்கிக்கொள்ளப்படும்.
***
சரித்திர வியாழன்: -
முதலாம் பானிபட் போர்:
(Battle of Panipat) என்பது பாபரின் படையெடுப்பு படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியின் படைகளுக்கும் இடையே, பானிபத்த்தில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் தில்லியில் முகலாயப்
பேரரசு நிறுவப்பட்டது. இந்த போர் வெடிமருந்து சுடுகலன்கள் மற்றும் புலம் பீரங்கி
தொடர்புடைய முந்தைய போர்களில் ஒன்று. 21 ஏப்ரல் 1526
அன்று இப்ராகிம் லோடி இறந்ததனால் இப்போர்
முடிவுக்கு வந்தது.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப்பகுதி:
லோடி வம்சத்தின் கடைசி அரசர் யார்?
விடை: இப்ராஹிம் லோடி.
***
சிந்தனைக்கீற்று:
Forget and forgive.
மறப்போம், மன்னிப்போம்.
***
செய்திகள்:
ப.சிதம்பரம் வெளிநாடு செல்லத் தடை!
***
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
***
திருச்சியில் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை!
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.