அன்பு மாணவச் செல்வங்களே!
இந்த வாரமும் இசைவெள்ளி பகுதியில் அழ. வள்ளியப்பா பாடலைப் படித்து,
உங்கள் இளைய வகுப்பு மாணவர்களுக்குச் சொல்லித்தாருங்களேன்.
***
நாளொரு குறட்பா:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
விளக்கம்: அறச்செயல்கள் பலவற்றை அழித்தவர்க்குக் கூட மன்னிப்பு உண்டு. ஆனால்,
ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு மன்னிப்பே கிடையாது.
***
இசைவெள்ளி: -
அ.ஆ. – அழ. வள்ளியப்பா
அ, ஆ என்றேனே.
அத்தை வீடு சென்றேனே.
இ, ஈ என்றேனே.
இட்டலி எட்டுத் தின்றேனே.
உ, ஊ என்றேனே.
உடனே காபி குடித்தேனே.
எ, ஏ என்றேனே.
ஏப்பம் நன்றாய் விட்டேனே.
ஐ என்று சொன்னேனே.
அங்கே நீட்டிப் படுத்தேனே.
ஒ, ஓ என்றேனே.
ஒருமணி சென்று எழுந்தேனே.
ஒள என்று சொன்னேனே.
ஆடிப் பாடிக் குதித்தேனே.
ஃ என்று சொன்னேனே.
அக்கக் காவெனச் சிரித்தேனே!
***
பொது அறிவுப்
பொக்கிஷம்: - சுற்றுலா பகுதி:
ரோஜா தேசம் என்றழைக்கப்படும் மாநிலம் எது?
விடை: ஜம்மு காஷ்மீர்
***
சிந்தனைக்கீற்று:
A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
***
செய்திகள்:
காந்தி
இன்றும் தேவைப்படுகிறார்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேட்டி.
***
நீலகிரியில்
உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடியை ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி
உத்தரவிட்டார்.
***
அத்திவரதர்
தரிசனம் நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு!
***
மூன்றாகப் பிரிகிறது
வேலூர்! சுதந்திர தின கொடியேற்றத்தில் முதல்வர் அறிவிப்பு.
----------பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.