தூரிகை (மாணவர் இதழ் 35) 20.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய சிந்தனைச் செவ்வாயில் ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள் உங்களின் சிந்தைக்கு விருந்தாகும்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் 12 நடுவுநிலைமை குறள் எண் 2
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
விளக்கம்: நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
***
சிந்தனைச்செவ்வாய்: - ஷேக்ஸ்பியர்
எல்லோரையும் நேசி. சிலரை நம்பு. யாருக்கும் தீங்கு செய்யாதே.
அன்பின் பாதை சுமூகமானதல்ல.
நாம் யார் என்பது நமக்குத் தெரியும். நாம்  எவ்வாறு ஆகப்போகிறோம் என்று நமக்கே தெரியாது.
நமது லட்சியம் வானத்து விண்மீன்களிடம் இல்லை. அது நம்மிடமே இருக்கிறது.
இந்த உலகமே நாடகமேடை. எல்லா மனிதர்களும் நடிகர்களே.
***
பொது அறிவு பொக்கிஷம்: - இலக்கியப்பகுதி:
நலவெண்பா நூலை இயற்றியவர் யார்?
விடை: புகழேந்தி புலவர்
***
சிந்தனைக்கீற்று:
A fog cannot be dispelled with a fan
சூரியனை கையால் மறைக்க முடியுமா?
***
செய்திகள்:
சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: துவங்கினார் முதல்வர் எடப்பாடி.
***
துரையூர் அருகே கிணற்றுக்குள் விழுந்தது மினி லாரி: எட்டு பேர் பலி!
***
பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: முதல்வர் தகவல்.
----------
  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.