தூரிகை (மாணவர் இதழ் 49) 13.செப்டம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய இசைவெள்ளியில் பொம்மை குறித்த நீங்கள் ஏற்கனவே நன்கறிந்த பாடல். படித்துப் பாருங்களேன்.
 ***
நாளொரு குறட்பா: - அதிகாரம் அடக்கம் உடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை
ஆரிருள்  உய்த்து விடும்.
விளக்கம்: அடக்க குணம், நிலையாப்புகழை நமக்கு சேர்க்கும். அடங்காத குணம், நம் நிலையை தாழ்த்தி இருட்டுக்குள் தள்ளிவிடும்.
***
இசைவெள்ளி: - பொம்மை பாடல்:
பொம்மை பொம்மை பொம்மை பார்,
புதிய புதிய பொம்மை பார்,
கையை ஆட்டும் பொம்மை பார்,
காலைத் தூக்கும்் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்,
தாளம் போடும் பொம்மை பார்,
எனக்கு கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகினிலே.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலாப்பகுதி:
உலகின் மிகப்பெரிய சிகரம் எது? எங்குள்ளது?
விடை: எவரெஸ்ட், இமயமலையில் உள்ளது.
 ***
சிந்தனைக்கீற்று:
joined thousand hands never hide the sun.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
***
செய்திகள்:
ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களை அனுபவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
***
பரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்துத் தரக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
***
பொங்கல் ரயில் டிக்கெட்: நேற்று தொடங்கியது முன்பதிவு!
***
சாதி மத மறுப்பு திருமணங்கள் சமூக நலனுக்கானவை: உச்ச நீதிமன்றம் கருத்து.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.