அன்பு மாணவச்
செல்வங்களே!
இன்றைய இசை
வெள்ளியில் மாம்பழம் பாடல். வரிவரியாய் படித்து மகிழுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் வெகுளாமை
தன்னைத்தான் காக்கின் சிநம்காக்க காவாக்கால்
தன்னையே கொள்ளும் சினம்.
விளக்கம்: ஒருவர் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால், அந்தக் கோபமானது, அவரையே கொன்றழித்துவிடும்.
***
இசைவெள்ளி: மாம்பழம் பாடல்:
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்;
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்:
அழகான மாம்பழம்,
அல்வா போல்
மாம்பழம்:
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கு வேணுமா?
இங்கே ஓடிவாருங்கள்,
பங்கு போட்டு
தின்னலாம்.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: சுற்றுலாப் பகுதி:
மவுண்ட் அபு
குன்றுகள் எந்த மாநிலத்தில் உள்ளது?
விடை: ராஜஸ்தான்
***
சிந்தனைக்கீற்று:
Old is gold.
பழைமை விலை
மதிப்பற்றது.
***
செய்திகள்:
பதினொன்று மற்றும்
பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு.
***
ஈரான் மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப்
பேட்டி.
***
மாணவன் படிப்பை நிறுத்தினால் அரசுதான் காரணம்: கமல்ஹாசன் பேச்சு.
***
ஆய்வுக் கூட்டங்கள்: தமிழக ஆளுநர் பாணியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ...
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.