அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய தகவல் புதனில், தற்போது இந்திய
அரசியலில் பரபரத்துக் கிடக்கும் காஷ்மீர் பற்றி சில தகவல்கள். படித்துப்
பயன்பெறுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் 11
குறள் எண்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
விளக்கம்: நமக்கு உதவியவருக்கு
நாம் செய்யும் உதவி கைம்மாறு கருதியன்று. அவர் பண்புநலன் கருதியே ஆகும்.
***
தகவல் புதன்: - காஷ்மீர்:
இந்தியாவின் வடக்கு முனை காஷ்மீர்.
இமயமலைக்கும் பீர்பாஞ்சல் மலைத்தொடருக்கும் இடைப்பட்ட பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கு
என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம்தான் காஷ்மீரின்
முக்கிய பொருளாதார ஆதாரம். அனந்த்நாக், பாரமுல்லா,
பட்காம், குப்வாரா, ஸ்ரீநகர், குல்காம், ஷோபியான், கந்தர்பால், புல்வாமா, பண்டிபுரா ஆகிய பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது காஷ்மீர்
பிராந்தியம்.
காஷ்மீர் பிராந்தியம் முஸ்லிம்கள்
பெருமளவிலான எண்ணிக்கையில் வசிக்கும் பிராந்தியம். இங்குள்ளவர்களில் ஏறக்குறைய 97% பேர்
முஸ்லிம்கள். காஷ்மீரியும் உருதுவும் இந்தப் பிராந்தியத்தில் அதிகம் பேசப்படும்
மொழிகள்.
பீர்பாஞ்சல் மலைத்தொடரானது காஷ்மீர்
பள்ளத்தாக்கி லிருந்து ஜம்முவைப் பிரிக்கிறது என்றாலும், காஷ்மீர்
பிராந்தியத்துடன் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் ஜம்மு பிராந்தியத்தினர். லே, கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்களை மட்டுமே உள்ளடக்கியது லடாக்
பிராந்தியம். மாநிலத்தின் மக்கள்தொகையில் லடாக் பிராந்தியத்தின் பங்கு வெறும்
2.31%.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - அறிவியல் பகுதி:
சூரியக் குடும்பத்திலிருந்து
விளக்கப்பட்ட கோள் எது?
விடை: புலூட்டோ.
***
சிந்தனைக்கீற்று:
A bad work man
blames his tools
ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.
***
செய்திகள்:
காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசை
எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகை! ...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார்
கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு.
370 சட்டப் பிரிவை நீக்கும் அரசின்
முடிவை இந்தியத் தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
நீலகிரியில் தொடர்கிறது கனமழை!
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.