தூரிகை (மாணவர் இதழ் 29) 8.ஆகஸ்ட்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
உங்கள் மனதில் தோன்றும் தவறான எண்ணங்களை அப்படியே ஒதுக்கிவிட்டுக் கடக்க முயற்சியுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் செய்நன்றி அறிதல் குறள் எண் 6
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
விளக்கம்: குற்றமில்லாத ஒழுக்கம் உடையவர்களின் நட்பை மறக்கக்கூடாது. தனக்குத் துன்பத்தில் உதவியவரின் நட்பை துறக்கவும் கூடாது.
***
சரித்திர வியாழன்: - சாணக்கியர்
சாணக்கியர் என்பவர் பண்டைய கால இந்திய ஆசிரியர் தத்துவ்வியலாளர், பொருளியல் அறிஞர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர்.
அவர் கௌடில்யர் என்ற பெயரால் அறியப்படுகிறார். விஷ்ணுகுப்தா என்றும் அழைக்கப்படும் அவர், இந்தியாவின் தத்துவ நூல்களுள் ஒன்றான அர்த்த சாஸ்திரத்தை இயற்றினார்.
மௌரியப் பேரரசை நிறுவுவதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் இவர்.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப் பகுதி:
சாணக்கியர் எழுதிய நூல் எது?
விடை: அர்த்த சாஸ்திரம்.
***
சிந்தனைக்கீற்று:
A bird in hand is worth two in bush
கிடைக்கப் போகும் பலாக்காயைவிட கையில் இருக்கும் கலாக்காயே மேல்.
***
செய்திகள்:
நேற்று கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!
***
முன்னால் நடுவண் அமைச்சர் சுஷ்மா சிவராஜ் காலமானார்.
***
மக்களவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! ...
***
விண்ணை முட்டுகிறது தங்கம் விலை!
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.