அன்பு மாணவச் செல்வங்களே!
இந்திய விடுதலைக்கு முன்னோடிப் போராகக்
கருதப்படும் வேலூர் சிப்பாய் புரட்சி குறித்து இன்றைய சரித்திர வியாழனில்
தெரிந்துகொள்ளுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் நடவுநிலைமை
குறள் 8
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்
அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம்: ஒரு பக்கம்
சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான
நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
***
சரித்திர வியாழன் – வேலூர் சிப்பாய்
புரட்சி:
வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர்
சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில்
நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்.
1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத்
துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள்
விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப்
போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய
ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி
குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு
வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது.
இதற்கிடையில், வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த
திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களுக்கு ஆரவாரம் கொடுத்துத் தூண்டி
விட்டதாகச் சொல்லப் படுகிறது.
10-7-1806 அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள்
அவர்கள் படுக்கையில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப்
பட்டனர். ஆனால் இந்தப் புரட்சி அரசியல், ராணுவ
குறிக்கோள்களுடன் எழவில்லை. அதனால், இந்தியத்
துருப்புக்களை, அதிகாரிகளைக் கொன்று களித்து வந்தனர்.
அவர்கள் வேலூர் கோட்டையின் கதவைக் கூட மூடவில்லை. இரண்டு நாட்களில், ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை (19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கிப் பாய்ந்து, வேலூர் கோட்டையைக் கைப்பற்றியது. அந்தச் சண்டையில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு
காயமடைந்தனர். மற்ற இந்தியத் துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது
செய்யப்பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
இச் சிப்பாய்ப் புரட்சி, 1857 பெரும் புரட்சிக்கு முன்னோடியாகும். இந்நிகழ்வின் ஞாபகமாக, இந்திய அரசு ஜூலை 2006ல், அஞ்சல் தலை வெளியிட்டது.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: வரலாற்றுப் பகுதி:
வேலூர் சிப்பாய் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
***
சிந்தனைக்கீற்று:
Wisdom is power.
அறிவே ஆயுதம்.
***
செய்திகள்:
ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்தால் தேச
விரோதியா?: மு.க.ஸ்டாலின் கேள்வி.
***
தேச நலனுக்காகவே ஜம்மு-காஷ்மீர்
சிறப்பு அந்தஸ்து ரத்து: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா
நாயிடு பேட்டி.
***
ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியைத்
திருடுவதால் பலனில்லை: ராகுல் காந்தி ஆவேசம்.
***
வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்டார் முதல்வர்.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.