அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய இசைவெள்ளியில் பலூன் பற்றிய
பாடல். கேட்டுப் பாடிப் பாருங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் நடுவுநிலைமை
குறள் 9
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
விளக்கம்: நேர்மையும்
நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும்
இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
***
இசைவெள்ளி: - பத்துப் பைசா
பலூன்
பத்துப் பைசா விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்.
பலூன் ஒன்று வாங்கினேன்.
பையப் பைய ஊதினேன்.
பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது.
பந்து போல ஆனபின்
பலமாய் நானும் ஊதினேன்.
பலமாய் ஊத ஊதவே
பானை போல ஆனது.
பானை போல ஆனதைக்
காண ஓடி வாருங்கள் !
விரைவில் வந்தால்
பார்க்கலாம்.
அல்லது,
வெடிக்கும் சத்தம்
கேட்கலாம் !
---அழ. வள்ளியப்பா
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலா பகுதி:
உலகிலேயே மிகப்பெரிய கடற்கரை எது?
விடை: அமெரிக்காவிலுள்ள மியாமி கடற்கரை
***
சிந்தனைக்கீற்று:
No smoke without fire.
நெருப்பில்லாமல் புகையாது.
***
செய்திகள்:
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய
நளினியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
***
75 புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய
அமைச்சரவை ஒப்புதல்! ...
***
பழனி பஞ்சாமிர்த கடைகளில் ஐடி ரெய்டு!
***
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.