தூரிகை (மாணவர் இதழ் 43) 4.செப்டம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய தகவல் புதனில், காற்றைப் பற்றிய ஒரு செய்தி. அதுவும் ஆய்வு செய்து சொல்லப்படுகிறது. படித்துப் பாருங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் கேள்வி
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
விளக்கம்:
காதுகளால் கேட்டறியும் கேள்விச்செல்வமே, செல்வங்களுள் சிறந்த செல்வமாகும்.
***
தகவல் புதன்: வெற்றிடத்தைக் காற்றடைக்கும்
N மிது கார்த்தி N
ஓரிடத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க உங்களால் முடியுமா? ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா? (பெரியவர்களின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்.)
என்னென்ன தேவை?
l தட்டு
l வண்ணப் பொடி கலந்த நீர் (வண்ணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.)
l இரண்டு மெழுகுவர்த்திகள்
l கண்ணாடி டம்ளர்
l தீப்பெட்டி
எப்படிச் செய்வது?
l தட்டில் மெழுகுவர்த்தியை வைத்து திரியைப் பற்ற வையுங்கள்.
l அந்த தட்டில் வண்ணம் கலந்த நீரை ஊற்றுங்கள்.
l மெழுகுவர்த்தி எரிய ஆக்சிஜன் தேவை. அதாவது காற்று தேவை என்பதால், நீங்கள் கொளுத்திய மெழுகுவர்த்தி அழகாக எரிந்துகொண்டிருக்கும்.
l இப்போது எரிந்துக்கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியின் மீது கண்ணாடி டம்ளரைக் கவிழ்த்து வையுங்கள்.
l நடப்பதைக் கவனியுங்கள். மெழுகுவர்த்தி சில விநாடிகள் எரிந்து, பிறகு அணைந்துவிட்டதா?
l அதேநேரத்தில் டம்ளருக்குள் உள்ள நீரானது மேலே உயருகிறதா?
l மெழுகுவர்த்தி அணைந்ததற்கும், தண்ணீர் மேலே உயர்ந்ததற்கும் காரணம் என்ன?
காரணம்
மெழுகுவர்த்தியின் மீது கண்ணாடி டம்ளரைக் கவிழ்த்தவுடன், அந்த டம்ளரில் இருந்த ஆக்சிஜன் விரைவாக உறிஞ்சப்பட்டுவிடுகிறது. அதாவது மெழுகுவர்த்தி எரிய காற்றை உறிஞ்சிக்கொள்கிறது. உறிஞ்சப்பட்ட காற்று இருக்கும்வரை மெழுகுவர்த்தி எரிகிறது. காற்று முழுவதையும் நெருப்பு உறிஞ்சிய பிறகு மெழுகுவர்த்தி அணைந்துவிடுகிறது. காற்று முழுமையாக உறிஞ்சப்பட்டுவிடுவதால், டம்ளருக்குள் வெற்றிடம் உருவாகிறது.
அதேநேரத்தில் டம்ளரைச் சுற்றி வெளிப்புறத்தில் காற்றழுத்தம் ஏற்படுகிறது. வெற்றிடம், காற்றழுத்தம் காரணமாகத் தட்டில் உள்ள நீர் அதிக அளவில் டம்ளருக்குள் செல்கிறது. இதனால், தண்ணீர் மேலே உயருகிறது. இதே சோதனையை இரண்டு மெழுகுவர்த்திகள், மூன்று மெழுகுவர்த்திகள் என எண்ணிக்கையை அதிகரித்து செய்து பாருங்கள்.
பயன்பாடு
ஓரிடத்தில் காற்று உறிஞ்சப்படும்போது அங்கே வெற்றிடம் ஏற்படும் என்பதையும் வெற்றிடத்தைக் காற்று அடைத்துக்கொள்ளும் என்பதையும் அறிய இந்தச் சோதனை பயன்படுகிறது. காற்றழுத்தமானி இந்தத் தத்துவத்தில்தான் செயல்படுகிறது. 
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - அறிவியல் பகுதி:
எலெக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை: J.J. தாம்சன்
***
சிந்தனைக் கீற்று:
necessity is the mother of invention.
தேவையே கண்டுபிடிப்பின் தாய்.
***
செய்திகள்:
நீலகிரியில் மீண்டும் கனமழை!
***
உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
***
சென்னையில் சுற்றுச் சூழலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
***
தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.