அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய தகவல் புதனில், மனித எலும்புகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் நட்பு
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு.
விளக்கம்: உடுத்தியிருக்கும் உடை அவிழ்ந்து கீழே விழுகையில், கை தானே
ஓடிச்சென்று உதவுவதுபோல, நண்பனுக்குத் துன்பம் நேர்கையில், அவன் அழைக்காமலேயே
ஓடிச்சென்று உதவுவது சிறந்த நட்பாகும்.
***
தகவல் புதன்: மனித எலும்புகள்:
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய
எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக்
கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக்
கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து
மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான
மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்)
அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3
- 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம்.[1] மனித
மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத்
தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial
bones) பிரிக்கப்பட்டுள்ளன. (
***
பொது அறிவுப் பொக்கிஷம்: அறிவியல் பகுதி:
சந்திராயன் 1 திட்டத்தில் பங்குபெற்ற தமிழ் பேசும் விஞ்ஞானி யார்?
விடை: மயில்சாமி அண்ணாதுரை
***
சிந்தனைக்கீற்று:
Time and tide wait for none.
ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது.
***
செய்திகள்:
தந்தைப் பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா மாநிலமெங்கும் அனுசரிப்பு.
***
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு
வெடிகுண்டு மிரட்டல்!
***
சவுதி அரேபியா
மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்
அச்சுறுத்தியுள்ளனர்.
***
இந்தியாவுக்குப்
பல மொழிகள் இருப்பது பலவீனமல்ல, ராகுல் காந்தி பேட்டி.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.