தூரிகை (மாணவர் இதழ் 64) 04.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
இந்த வாரம் முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஆளுமைத்திங்கள் என்ற ஒரு புதிய பகுதி நமது இதழில் இடம்பெறுகிறது. இந்த மாதம் முழுக்க அனைத்து ஆளுமைத்திங்கள் பகுதிகளையும் நிறைக்கிறார் உங்கள் அன்பு மாமா நேரு.
நாளொரு குறட்பா: - அதிகாரம் ஒழுக்கம் உடைமை:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கம்: ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
ஆளுமைத்திங்கள்: - பண்டிதர் ஜவஹர்லால் நேரு:
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் "சிகப்பு நகை" என்று பொருள், இச்சொல்லிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது.
'காசுமீரப் பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். (காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று.
நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்த மோதிலால் நேரு, பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். ராஜாக்கள் ,ஜமிந்தார்கள் மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும் ,புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்
ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமற்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டிலிருந்து வெகுதொலைவு வந்ததையும் உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்குப் பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது. மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
(தொடரும்)
பொது அறிவுப் பொக்கிஷம்: - கலைப்பகுதி:
தமிழகத்தின் நாதசுரம் வட இந்தியாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: ஷெனாய்.
சிந்தனைக்கீற்று:
Listen much, speak few.
அதிகம் கேள், குறைவாகப் பேசு.
செய்திகள்:
தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர்.
தமிழகத்திற்கு தனிக்கொடி உருவாக்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
குழப்பத்தை ஏற்படுத்தி திமுகவை அழித்துவிடலாம் என்று சிலர் நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.