அன்பு மாணவச் செல்வங்களே!
அனைவருக்கும் பட்டாம்பூச்சி மாணவர் இதழ் சார்பாக குழந்தைகள் தின வாழ்த்துகள். நேரு, இந்தியா என்கிற நாடு உருவாகவும், ஒருங்கிணையவும் முக்கியக் காரணிகளாகத் திகழ்ந்தவர்களுள் ஒருவர். அவருடைய வரலாற்றைப் படிப்பதோடு, சிறையிலிருந்துகொண்டு தன் மகளுக்கு உலக வரலாறுகள் குறித்து அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பான டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலையும் படியுங்கள்.
நாளொரு குறட்பா:
- அதிகாரம் ஒழுக்கம் உடைமை
ஒழுக்க
முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும்
வாயாற் சொலல்.
ஒழுக்க
முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும்
வாயாற் சொலல்.
விளக்கம்: தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச்
சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
வகுப்பறை வியாழன்: - ஆங்கிலம் கற்போம்:
தமிழானாலும், ஆங்கிலமானாலும் ஒரு வாக்கியத்தின் முதலில்
வரும் சொற்கள் நான், நீ, நாம், அவன், அவள், அதெ, அவர்கள் மற்றும் அவைகள் என்பவைதாம்.
அதாவது, ஒரு செயல் நடக்கிறது. அதைச் சொல்வதே வாக்கியத்தின் வேலை. அந்த வாக்கியத்தின்
முதல் சொல்லாக அமைவது அந்தச் செயலை யார் செய்கிறார்கள் என்பதுதான். அந்த வகையில் நாம்
மேலே பார்த்த சொற்களுக்கான நேர் ஆங்கிளச் சொற்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
நான் – I am
நீ நீங்கள் – you
நாம் – we
அவன் – he
அவள் – she
அது – it
அவர்கள் அவைகள் – they
தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப் பகுதி:
ஆங்கிலேயர் அமைத்த
காலாப்பாணி சிறை எங்கு அமைக்கப்பட்டிருந்தது?
விடை: அந்தமான்
சிந்தனைக்கீற்று:
Effort never fails.
முயற்சி திருவினையாக்கும்.
செய்திகள்:
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி
நீக்கம் செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
புதன் கிரகம், சூரியனை அதன் நேர்க்கோட்டில் கடந்து செல்லும் அரிய காட்சியின் வீடியோவை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.