அன்பு மாணவச் செல்வங்களே!
நாளொரு குறட்பா:
- ஒழுக்கம் உடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
விளக்கம்: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும்
பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே
ஆவார்கள்.
கணினி வெள்ளி: - கணினி
அறிவோம்:
கணினியில் நாம் தொட்டுணரக்கூடிய பகுதிகள் வன்பொருள்கள் (hardwares) எனப்படும். கணினி இயங்குவதற்கு காரணமான கண்ணுக்குத் தெரியாத
செயலிகள் மென்பொருள்கள் (softwares)
ஆகும். அதாவது மனிதனையும் கணினியையும் ஒப்பிட்டுச்
சிந்தித்தால், வன்பொருள் என்பது நமது உடல் போன்றது. மென்பொருள் நமது உயிர் போன்றது.
தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலாப்பகுதி:
புத்தர் பிறந்த ஊர் எது?
விடை: கபிலவஸ்து
சிந்தனைக்கீற்று:
Spirit is an art, body is wall.
உயிர் என்பது சித்திரம்,உடல்
என்பது சுவர்.
செய்திகள்:
ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்! ...
சந்திராயன் 3: பணியை துவங்கியது இஸ்ரோ!
டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.