பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 75) 20.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
ஊன்றுகோல் பழகுங்கள். எதிர்காலத்தில் நாம் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இந்த உலகை வளம்வர அதுதான் நமக்கு உதவும்.
நாளொரு குறட்பா: - அழுக்காறாமை:
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
விளக்கம்: யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
தகவல் புதன்: - புதிய மாவட்டங்கள்:
தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி புதிதாக ஐந்து மாவட்டங்கள் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட உள்ளன. அவை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கல்லக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களே அவை.
அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு, வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவையும், விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்டங்களிலிருந்து முறையே கல்லக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படுகின்றன.
பொது அறிவுப் பொக்கிஷம்: - அறிவியல் பகுதி:
மின்னோட்டத்தின் அலகு எது?
விடை: ஆம்பியர்
சிந்தனைக்கீற்று:
To absorb the air like bamboo not a ball.
காற்றை உள்வாங்கும்போது மூங்கிலாக இருங்கள், பந்தாக அல்ல.
செய்திகள்:
பெரம்பலூர் அருகே அரியலூர் ஆட்சியர் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவி படுகாயமடைந்துள்ளார்.
சியாச்சின் பனிச்சரிவு: 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி! ...
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: டிடிவி தினகரன் பேட்டி.

அதிமுக கொடிக்கம்ப விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.