அன்பு மாணவச் செல்வங்களே!
தினமும் மூன்று
பக்கங்களாவது பிரெயில் வாசியுங்கள். அது உங்களின் மொழித்திறனை வளர்க்கும்.
நாளொரு குறட்பா:
அதிகாரம் அழுக்காறாமை:
அறன்ஆக்கம்
வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது
அழுக்கறுப் பான்.
விளக்கம்: அறநெறியையும், ஆக்கத்தையும்
விரும்பிப் போற்றாதவன்தான்,
பிறர் பெருமையைப்
போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
வகுப்பறை வியாழன்: - ஆங்கிலம் கற்போம்:
கடந்தவாரம் நான், நீ என்பவைகளின் நேர் ஆங்கிலச்
சொற்களைப் பார்த்தோம். இந்த வாரம், எனக்கு, உனக்கு போன்ற சொற்களின் நேர் ஆங்கிலச் சொற்களைப்
பார்ப்போம்.
எனக்கு என்னை-me
என்னுடைய-my
உனக்கு உன்னை-you
உன்னுடைய உங்களுடைய-your
எங்களுக்கு எங்களை-us
எங்களுடைய-our
அவனுக்கு அவனை-him
அவனுடைய-his
அவளை அவளுக்கு அவளுடைய-her
அதனை அதற்கு-it
அதனுடைய-its
அவைகளை அவர்களை அவைகளுக்கு அவர்களுக்கு-them
அவர்களுடைய அவைகளுடைய-their
தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப்பகுதி:
இந்தியாவில் முதன்முதலில் இரயில் சேவை தொடங்கப்பட்ட
இடம் எது?
விடை: மும்பை தானே இடையிலான போக்குவரத்து
சிந்தனைக்கீற்று:
All towns are ours, all are our relatives.
யாதும் ஊரே, யாவரும் கேளீர்.
செய்திகள்:
புதுக்கோட்டை
மாவட்ட கலெக்டரை விமரிசித்துப் பேசியதற்காக திருமயம் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி மீது
நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.
பள்ளிக்குழந்தைகளுக்கு
‘வாட்டர் பெல்’: புதுவையில் அமல்! ...
தேவைப்பட்டால்
கண்டிப்பாக இணைவோம்: ரஜினி,
கமல் பேட்டி.
சர்க்கரை ரேஷன்
கார்டுகள் இனி அரிசி கார்டுகளாகும்! முதல்வர் உத்தரவு.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.