பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 81) 03.டிசம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
அனைவருக்கும் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகள். இந்த நாளில் நமக்கான உரிமைகள் குறித்து அறிந்துகொண்ளவும், அவைகள் கிடைப்பதற்கு நம் மூத்தவர்கள் மேற்கொண்ட ஒப்பற்ற போராட்டங்களை நினைவுகூர்தலுமே நம் தலையாய கடமை.
நாளொரு குறட்பா: அதிகாரம் ஆள்வினை உடைமை
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்த
ஆள்வினை இன்மை பழி.
விளக்கம்: உடலில் ஒரு உறுப்பு இல்லாமல் இருப்பது குற்றமல்ல. ஆனால் முயற்சியே இல்லாதிருத்தலே குற்றமாகும்.
சிறப்புச் செவ்வாய்: நிக் வோய்ச்சிச்
சொந்த வாழ்க்கை[தொகு]
செருபிய இனத்தைச் சார்ந்த இவர்,[3] ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் என்னுமிடத்தில் பிறந்தார்.[4] இவர் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார்.
ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.
இவர் தன்னுடைய எட்டாவது அகவையில் மன உளைச்சல் காரணமாக, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார்.[5] அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி காட்டினார்[6], இது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது.
தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.
தன்னுடைய ஏழாம் வகுப்பில், பள்ளியின் மாணவத் தலைவராகவும், தங்கள் பள்ளிக்கான நன்கொடை வசூலிப்பதற்காகவும் அருகிலுள்ள தொண்டு நிறுவங்களை அணுகுதல் உள்ளிட்டவைகளை செய்பவராகவும் விளங்கினார்.[7] பிறகு தன்னுடைய இலாப நோக்கற்ற லைப் வித் அவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) நிறுவனத்தை தொடங்கினார்.
2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. தற்போது, ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.[4]
2012-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் நாள், கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[8]
நிக்கோலஸ் சேம்சு வோய்சிக், சுவிசர்லாந்தில், 30 ஜனவரி, 2011 அன்று
வோய்ச்சிச் தன்னுடைய 21-ம் அகவையில் கிரிபித் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தார். கூடவே, மிகப்பிரபல்யமான பேச்சாளராகவும் உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவருடன் உரையாற்றியுள்ளார்.[9] இவர் பள்ளிகள், நிறுவனங்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார்.
வோய்சிச் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார். இவருடைய முதல் புத்தகமான, லைப் வித் அவுட் லிமிப்ஸ்(Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life)[10] 2010-ம் ஆண்டு வெளியானது. பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில் செய்யும் செயல்களை லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார். இதனுடைய இரண்டாம் பாகம், பிரிஸ்பேனில் உள்ள ஒரு தேவாலயத்தில் படமானது; இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும். இளைஞர்களுக்காக, நோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ் (No Arms, No Legs, No Worries: Youth Version) என்ற தொகுப்பினையும் வெளியிட்டார்.[11]
மார்ச் 2008, பாப் கம்மிங்கிசுடன், 20/20 என்ற அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணலில் பங்குபெற்றார். இவர் தி பட்டர்பிளை சர்க்கஸ் என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார், அது 2009-ம் ஆண்டு டோர்போஸ்ட் திரைப்பட திட்டத்திலும், மெத்தேட் பெஸ்ட் திரைப்பட விழாவிலும், தி பீல் குட் பிலிம் விழாவிலும் (2010) சிறந்த திரைப்படத்திற்கான பரிசு பெற்றது.[12] சம்திங்க் மோர், என்னும் காணொளியை யூடியூபில் வெளியிட்டார்.[13]
பொது அறிவுப் பொக்கிஷம்:
எந்த ஆண்டிலிருந்து அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ல் கொண்டாடப்படுகிறது?
விடை: 1992.
சிந்தனைக்கீற்று:
need rights not mercy.
தேவை உரிமை, கருணை அல்ல.
செய்திகள்:
இன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் 27, 30: உள்ளாட்சித் தேர்தல்!
ஏர்டெல், வோடஃபோன், ஜியோ: 40% கட்டண உயர்வு!
நகர்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.