அன்பு மாணவச் செல்வங்களே!
இசை வெள்ளி பகுதியில் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடலைப் படித்துப்
பாருங்கள். அதைச் சுவைபடப் பாடிப்பாருங்கள்.
***
நாளொரு குறட்பா:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
விளக்கம்: தம்முடைய துன்பத்தைப் போக்கி
உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
***
இசைவெள்ளி: - அழ. வள்ளியப்பா
3. பார் பார்
தரையின் மேலே
தொட்டி பார்
தொட்டி மேலே
செடியைப் பார்
செடியின் மேலே
பூவைப் பார்
பூவின் மேலே
வண்டைப் பார்
வண்டின் மேலே
பளபளக்கும்
வர்ணம் உண்டு;
அதையும் பார் !
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலாப் பகுதி:
பாறைத்தோட்டம் எங்குள்ளது?
விடை: சண்டிகட்.
***
சிந்தனைக்கீற்று:
Do or die.
செய் அல்லது செத்து மடி.
***
செய்திகள்:
நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில்
புதிதாக 50 வங்கிக் கிளைகளைத் திறப்பதாக ஸ்டேட்
பேங்க் இந்தியா வங்கி அறிவித்துள்ளது.
***
கலைஞர் வழியில் சர்வாதிகாரத்தை
எதிர்ப்போம்: மம்தா பேட்டி.
***
காஷ்மீர் விவகாரத்தில் அரசின்
முடிவுக்கு மாலத்தீவுகள் ஆதரவு!
***
முதல்வரை சந்திக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
பதவி இழந்த மணிகண்டன் பேட்டி.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.