தூரிகை (மாணவர் இதழ் 67) 07.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
ஆங்கிலம் கற்பதைத் தொடர்வோம் இன்றைய வகுப்பறை வியாழனில்.
நாளொரு குறட்பா: - அதிகாரம் ஒழுக்கம் உடைமை
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
விளக்கம்: பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
வகுப்பறை வியாழன்: - ஆங்கிலம் கற்போம்:
என்ன குழந்்தைகறே! கடந்த வாரம் நாம் தந்த அந்த மூன்று வினாக்களைக் கண்டுபிடித்தீர்களா? தமிழானாலும், ஆங்கிலமானாலும் வாக்கிய அமைப்பு சில மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கும்.
உதாரணமாக, நான் மதுரைக்குச் செல்கிறேன். என்ற தமிழ் வாக்கியத்தைப் பகுத்துப் பார்த்தால், முதலில் செய்பவன் நான், அதன்பிறகு எங்கு எது பற்றிய விவரங்கள் அதாவது மதுரை, கடைசியாக போகிறேன் என்கிற செயல் வருகிறது. இதை அப்படியே ஆங்கிலத்தில் கூறிப் பார்ப்போம்.
I go to Madurai.
இந்த வாக்கியத்தில் கடைசியாக வந்த போகிறேன் (go) என்ற செயல் இரண்டாவதாகவே வந்துவிடுகிறடு. எங்கு எப்படி என்பதற்கான விடை கடைசியாக வருகிறது. இதுதான் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் இடையேயான வாக்கிய அமைப்பு வேறுபாடு.
இந்த வாக்கியங்களை ஆங்கிலத்திற்கு மாற்ற முயலுங்களேன்.
நான் மாம்பழம் சாப்பிடுகிறேன்.
நீ புத்தகம் படிக்கிறாய்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப் பகுதி:
சலீம் என்கிற இயற்பெயர் கொண்ட முகலாய மன்னர் யார்?
விடை: ஜஹாங்கீர்
சிந்ந்தனைக்கீற்று:
Word brass, act gold.
சொல் பித்தளை, செயலே தங்கம்.
செய்திகள்:
இன்போசிஸ்: பத்தாயிரம்  ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு!
உடல்நலக் குறைவு காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி.

முரசொலி நில விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் ஆணையத்திடம் ஆதாரங்களை வழங்குவேன் என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.