அன்பு மாணவச் செல்வங்களே!
ஐந்து விரல்களும்
வெவ்வேறு உயரத்தில் இருப்பதுபோல, ஒவ்வொரு மனிதரும் தங்கள் குணத்தால், சொல்லால், செயலால்
வேறுபட்டுக் காணப்படுவார்கள். எனவே எவரிடமும் எதிர்பார்ப்பு கொள்ளாமல், அன்போடு மட்டும்
பழகுங்கள்.
நாளொரு குறட்பா:
- அதிகாரம் ஒழுக்கம் உடைமை:
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
விளக்கம்: பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும்
அமையும் வாழ்வு, உயர்வான
வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
கணினி வெள்ளி:
- கணினி அறிவோம்:
கணினி என்பது உள்ளீட்டு மற்றும் வெளீயீட்டுச் சாதனங்களை (input and output devices) உள்ளடக்கிய வன்பொருள் மற்றும் மென்பொருள்களால்
(hardwares and
softwares) ஆன ஒரு மின்னணு சாதனம்.
நாம் தகவல்களை உள்ளிட்டு மீண்டும் பெறும் வகையில், விசைப்பலகை (keyboard) மற்றும் மௌஸ் ஆகியவற்றின் மூலமாக நாம் தகவல்களை உட்செலுத்துவதால்
இவை உள்ளீட்டுக் கருவிகள். நாம் விரும்பும் தகவல்களை நமக்கு வழங்குகிற கணினித்திரை
(monitor) மற்றும் ஒலிப்பான்கள் (speakers) ஆகியவை வெளீயீட்டுக் கருவிகள். சரி வன்பொருள் மென்பொருள்
என்றால் என்ன? அடுத்த வாரம்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலாப்பகுதி:
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஒரே தலைநகரம் எது?
விடை: சண்டிகட்
சிந்தனைக்கீற்று:
To learn from mistake is knowledge.
தவறுக்கு வருந்துவதைவிட அதிலிருந்து கற்றுக்கொள்வதே அறிவு.
செய்திகள்:
கட்டுமானத் துறைக்கு 25000 கோடி நிதி: மத்திய அரசு
ஒதுக்கீடு.
சேலத்தில் பெண் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது!
முரசொலி அலுவலகத்துக்குப் பாதுகாப்பு கேட்கிறது
திமுக! ...
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயார்: கமல் பேட்டி.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.