அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய தமவல் புதனில் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த புள்ளிவிவரங்களைப் படித்து மனதில் ஏற்றுங்கள்.
நாளொரு குறட்பா:
ஒழுக்கம்
உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த
பிறப்பாய் விடும்.
ஒழுக்கம்
உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம்
தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
தகவல் புதன்: உள்ளாட்சி அமைப்புகள்:
விரைவில் உள்ளாட்சித்
தேர்தல் வரவிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 15 மாநகராட்சிகள், 121
நகராட்சிகள், 12,524 கிராம
ஊராட்சிகள், 99,333 கிராம
ஊராட்சி வார்டுகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், 6471 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சித்
தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்
பொறுப்பு மாநிலத் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தது.
பொது அறிவுப் பொக்கிஷம்:
- அறிவியல் பகுதி:
சிந்தனைக்கீற்று:
Not learn, have experience.
கற்பதைவிட அனுபவம் மேலானது.
செய்திகள்:
வரும் 10ஆம் தேதி முதல் காவல் துறையினருக்கு
விடுமுறை வழங்கக் கூடாது என டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சசிகலா குடும்பத்தினரின் ரூ.1600 கோடி சொத்துக்கள்
முடக்கம்? ...
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குப் பதில் வாழையிலை
பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆலோசனை
வழங்கியுள்ளது.
ஆழ்துளை கிணறை மூடச்சொன்ன இளைஞரை திட்டியதாக
வெளியான ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்று கரூர் ஆட்சியர் அன்பழகன்
விளக்கம் அளித்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.