அன்பு மாணவச் செல்வங்களே!
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் இந்்த நாளில் நான் எல்லா மனிதர்களிடமும் அன்புடையவனாக
இருப்பேன் என உறுதிகொண்டு அந்த நாளைத் தொடங்குங்கள்.
நாளொரு குறட்பா:
அதிகாரம் ஒழுக்கமுடைமை
ஒழுக்கத்தின்
ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம்
படுபாக் கறிந்து.
விளக்கம்: மன
உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம்
குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
ஆளுமைத்திங்கள்:
ஜவஹர்லால் நேரு
திருமணம்
கமலா கவுல்
என்ற 16 அகவை நிரம்பிய
காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல்
மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற
மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா
காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச்
செயல்பட்டார். ஆனால் 1936
இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். அரசியல்
1916 இல்
லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச்
சந்தித்தார். 1919 இல்
ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த
ஆண்கள், பெண்கள்,
குழந்தைகளை ஆங்கிலேய அரசு
கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம்
ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின்
நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். தொடரும்
பொது அறிவுப் பொக்கிஷம்: கலைப்பகுதி:
கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவிய மன்னன் யார்?
விடை: இராஜேந்திர சொழன்.
சிந்தனைக்கீற்று:
Eyes of the
house are windows.
ஜன்னல்களே வீட்டின்
கண்கள்.
செய்திகள்:
திருநங்கைகள் திமுகவில் சேரலாம்: பொதுக் குழுவில் தீர்மானம்! ...
மிசாவில் ஸ்டாலின் சிறை சென்ற ஆவணங்கள்: வெளியிட்டது திமுக ...
அயோத்தியில் ராமர் கோயில்: உச்ச நீதிமன்றம் ஒரு மனதாகத் தீர்ப்பு.
சாஸ்திரங்கள் அடிப்படையிலான தீர்ப்பு: திருமாவளவன் பேட்டி.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.