பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 77) 22.நவம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
எத்தனை படித்தாலும் ஒழுக்கம் குன்றி நடந்தால், நீங்கள் எவ்வளவு படித்தும் பயனில்லை.
நாளொரு குறட்பா: - அதிகாரம் அழுக்காறாமை
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
விளக்கம்: தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
கணினி வெள்ளி: - கணினி அறிவோம்:
இன்று நாம் பார்க்கவிருக்கும் கணினியின் முக்கிய பகுதி கணினியின் மூளை எனப்படுகிற சிபியூ (CPU) Central Process Unit ஆகும். இதுதான் கணினி இயங்குவதற்குக் காரணமான பகுதி. இங்குதான் மூளையைப் போன்றே நினைவகம், செயலகம் அனைத்தும் உள்ளன. தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: சுற்றுலாப் பகுதி:
அலகாபாத் நகரத்தின் புதிய பெயர் என்ன?
விடை: ப்ரயாக்ராஜ்
சிந்தனைக்கீற்று:
Live let to live.
வாழ் வாழவிடு.
செய்திகள்:
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.
கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர் அம்மாநில அரசின் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் நான்காம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி: தினகரன் பேட்டி.

கமல் -ரஜினியை விட நானே சீனியர் : டி .ஆர் பேட்டி.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.