அன்பு மாணவச் செல்வங்களே!
உங்களின் இயற்கைக் கொசுவத்தி தயாரிப்பு காணொளி பார்த்தேன். மிகவும் அருமையாக
இருந்தது. பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் பட்டாம்பூச்சி இதழ் சார்பாக
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நாளொரு குறட்பா: - அழுக்காறாமை
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்
ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
விளக்கம்: பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு
அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
தகவல் புதன்: - இந்திய அரசியல் அமைப்பு மன்றம்:
இந்திய அரசியலமைப்பு உருவான
வரலாறு[தொகு]
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான
பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது.
இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர
இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய
மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும்
இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய மன்றத்தை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு
மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946)
அரசியல் நிர்ணய மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல்
நிர்ணய மன்றத்திற்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர்
1946-ல் அரசியல் நிர்ணய மன்றம் கூடியது. அம்மன்றத்தின் தற்காலிக தலைவராக
சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின்
நிரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால்
சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய
மன்றம் செய்ய வேண்டியதாயிற்று.
பொது அறிவுப் பொக்கிஷம்: அறிவியல் பகுதி:
ஆற்றலின் அலகு எது?
விடை: ஜூல்.
Beauty gives opportunity, but skill gives success.
அழகு வாய்ப்பாத் தரும். திறமைதான் அதை நிலைத்த
வெற்றியாக்கும்.
செய்திகள்:
34ஆவது
மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி!
அரசியலமைப்பு
தின விழா: மோடி உரை - புறக்கணித்த எதிர்கட்சிகள்! ...
இன்று நம்பிக்கை
வாக்கெடுப்பு: மகாராஷ்டிரா வழக்கில் உச்ச
நீதிமன்றம் தீர்ப்பு.
தான் திமுக
உறுப்பினர்தான் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி.கணேசமூர்த்தி பிரமாணப்
பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.